News
2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்பார்கள் – நாட்டின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக இருக்கும்

2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்பார்கள் என்று கணிப்புகள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாட்டின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

