முழு விபரம் ..அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் – மோசடி விசாரணைப் பணியகத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் சொத்தை போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிஸை நீதவான் சதுரிகா டி சில்வா , கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஆண்டு தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்துடன் கூடிய இடத்தை போலி பத்திரம் தயாரித்து 3.6 மில்லியனுக்கு குத்தகைக்கு வழங்கி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு கல்கிஸை நீதவான் சதுரிகா டி சில்வா கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

