மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரினால் மக்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்

– தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகர சபை உறுப்பினர் அர்க்கம் முனீர் தெஹிவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை
நேற்று (30.07.2025) தெஹிவளை பிரதேச செயலகத்தில் ஜுலை மாதத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன் போது சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் பின்வரும் பிரச்சினைகளை முன்வைத்தார்.
1. நான் இந்தப் பிரச்சினையை முன்வைப்பதால் சிலவேளை அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். ஆனால் இதனை பேசாவிட்டால் நாங்கள் பதவிகளில் இருந்து எந்தப் பிரயோசனமும் இல்லை.
நேற்று கல்கிஸ்ஸை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி கீத்ம பர்னாந்து, தெஹிவளைப் பொலிஸார் 9 பேர் மீது போலி போதைப்பொருள் வழக்குகளை கொடுத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதில் ஒருவர் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபரின் சகோதரி, சகோதரனுடைய மரண சான்றிதலை நீதிமன்றில் சமர்பித்து, வழக்கை தொடர்ந்து நடாத்துவதிலிருந்து விடுவிக்குமாறு நேற்று முன்தினம் நீதவானைக் கோரியுள்ளார். அதே நேரம், குறித்த நபருக்கும் போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இருக்கவில்லை என்று அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தான் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்படும் போது குறித்த நபர் உயிரோடு இல்லை.
இதே போன்றே மாவனெல்லையைச் சேர்ந்த சுஹைலை, அநியாயமாக போலியான தீவிரவாத குற்றச்சாட்டினைப் பதிவு செய்து 9 மாதங்கள் அநியாயமாக தடுத்துவைத்தார்கள் இந்த தெஹிவளைப் பொலிஸார்.
தெஹிவளையில் வசிப்பவர்களுக்கும் பொலிசாரினால் பாதுகாப்பு இல்லை. ஸுஹைல் போன்று வேறு பிரதேசங்களில் இருந்து தெஹிவளைக்கு வந்த நபர்களுக்கும் பொலிஸாரின் பாதுகாப்பு இல்லை. மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரினால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது.
2. தெஹிவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலும் (Agenda) அதுகுறித்த ஆவணங்களும் கூட்டத்திற்கு முன்னரேயே மாநகர சபை உறுப்பினர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் முன் ஆயத்தமின்றி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளில் எங்களால் கருத்துக்களையோ ஆலோசனைகளையோ கூற முடியாதுள்ளது. தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை இந்த விடயத்தை மிக அழகாகக் கையாள்கிறது. கூட்டங்களுக்கு முன்னரேயே சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எமக்கு வழங்கப்படுகின்றன. அதே போன்றே ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட ஆவணங்களும் முன்கூட்டியே எமக்கு வழங்கப்பட வேண்டும்.
3. மீலாத் பாடசாலையின் இடப் பற்றாக்குறை குறித்து கடந்த 19.06.2025 அன்று இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று கௌரவ மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் இன்திகாப் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். கௌரவ மாநகர சபை உறுப்பினர்களான சம்சுதீன் ஜிப்ரி மற்றும் ரிஸ்வானா பலீல் ஆகியோரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர். கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கும் இன்றைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கும் இடையில் இதுகுறித்த முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பாடசாலை நிர்வாகம் புதிய பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிக்க காணித்துண்டொன்றையே வேண்டி நிற்கின்றனர். இதற்கான பொருத்தமான இடமொன்றை வழங்குவதாக இங்கே முடிவெடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மீலாத் பாடசாலையின் இடப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு பதிலளித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமன்மலீ குணசிங்க, பொருத்தமான இடமொன்றை கண்டறிந்து முன்மொழிந்தால் அதனைப் பெற்றுத்தர தாம் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.
මහජන ආරක්ෂාවට වගකිව යුතු පොලිසියෙන්ම මහජන ආරක්ෂාවට තර්ජනයක්
– සුදුසු පියවරක් ගන්නා ලෙස දෙහිවල ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේදී නාගරික මන්ත්රී අර්කම් මුනීර් ඉල්ලීමක් කරයි.
ඊයේ (2025.07.30) දෙහිවල ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේදී ජූලි මාසය සඳහා වන ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම පැවැත්විණි. එහිදී සමාජ සාධාරණ පක්ෂයේ නායක සහ දෙහිවල ගල්කිස්ස නාගරික මන්ත්රී අර්කම් මුනීර් පහත ගැටලු ඉදිරිපත් කළේය.
1. මම මේ ප්රශ්නය ඉදිරිපත් කිරීම නිසා සමහර විට තර්ජනවලට මුහුණ දීමට සිදු විය හැක. නමුත් මෙය කතා නොකළහොත් අප තනතුරුවල සිටීමෙන් පලක් නැත.
ඊයේ ගල්කිස්ස නීතීඥ සංගමයේ ලේකම් නීතිඥ ගීත්ම ප්රනාන්දු චෝදනා කර සිටියේ දෙහිවල පොලිස් නිලධාරීන් විසින් 9 දෙනෙකුට අසත්ය මත්ද්රව්ය නඩු ගොනු කර ඇති බවයි. ඉන් එක් අයෙක් එම මානසික පීඩනය නිසා ගෙල වැලලාගෙන සියදිවි හානිකරගෙන ඇත. අදාළ පුද්ගලයාගේ සහෝදරිය, තම සහෝදරයාගේ මරණ සහතිකය අධිකරණයට ඉදිරිපත් කර, නඩුව තවදුරටත් ගෙන යාමෙන් නිදහස් කරන ලෙස පෙරේදා මහේස්ත්රාත්වරයාගෙන් ඉල්ලා සිටියාය. එමෙන්ම අදාළ පුද්ගලයාට මත්ද්රව්ය සමඟ සම්බන්ධයක් නොතිබූ බවට රජයේ රස පරීක්ෂක දෙපාර්තමේන්තුවේ වාර්තාවද අධිකරණයට ඉදිරිපත් කර ඇත. තමා නිර්දෝෂී බව ඔප්පු වන විට අදාළ පුද්ගලයා ජීවතුන් අතර සිටියේ නැත.
මේ හා සමානවම දෙහිවල පොලිසිය, මාවනැල්ලේ සුහයිල්ව අසාධාරණ ලෙස ව්යාජ ත්රස්තවාදී චෝදනාවක් යටතේ මාස 9ක් අසාධාරණ ලෙස රඳවා තබා ගත්තා.
දෙහිවල පදිංචිකරුවන්ට පොලිසියෙන් ආරක්ෂාවක් නැත. සුහයිල් මෙන් වෙනත් ප්රදේශවලින් දෙහිවලට පැමිණි පුද්ගලයන්ටද පොලිස් ආරක්ෂාවක් නැත. මහජන ආරක්ෂාවට වගකිව යුතු පොලිසියෙන් මහජන ආරක්ෂාවට තර්ජනයක් වී ඇත.
2. දෙහිවල ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේ න්යාය පත්රය සහ ඊට අදාළ ලියකියවිලි රැස්වීමට පෙර නගර සභා මන්ත්රීවරුන්ට සහ අදාළ නිලධාරීන්ට ලබා දිය යුතුය. එසේ නොමැති නම්, පූර්ව සූදානමකින් තොරව ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේදී ඉදිරිපත් කරන මහජන ගැටලු සම්බන්ධයෙන් අපට අදහස් හෝ යෝජනා ඉදිරිපත් කළ නොහැක. දෙහිවල ගල්කිස්ස මහ නගර සභාව මෙම කාරණය ඉතා මැනවින් හසුරුවයි. රැස්වීම්වලට පෙර අදාළ සියලුම ලියකියවිලි අපට ලබා දේ. ඒ හා සමානව, සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම් ලේඛන ද අපට කල්තියා ලබා දිය යුතුය.
3. මීලාද් පාසලේ ඉඩකඩ ප්රශ්නය සම්බන්ධයෙන් පසුගිය 2025.06.19 දින පැවති ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේදී මා ප්රශ්න කළා. අද ගරු නාගරික මන්ත්රී මුහම්මද් ඉන්තිකාබ් මේ පිළිබඳව ප්රශ්න කළා. ගරු නාගරික මන්ත්රීවරුන් වන ෂම්සුදීන් ජිෆ්රි සහ රිස්වානා ෆලීල් ද ඔවුන්ගේ අදහස් ඉදිරිපත් කළා. පසුගිය ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම සහ අද ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම අතර මේ සම්බන්ධයෙන් කිසිදු ප්රගතිශීලී පියවරක් ගෙන නැහැ. පාසල් පරිපාලනය නව පාසල් ගොඩනැගිලි ඉදිකිරීම සඳහා ඉඩමක් ඉල්ලා සිටිනවා. මේ සඳහා සුදුසු ස්ථානයක් ලබා දීමට මෙහිදී තීරණය කළහොත් ඊළඟ පියවර ගත හැකියි.
මීලාද් පාසලේ ඉඩකඩ ප්රශ්නයට ප්රතිචාර දැක්වූ ප්රාදේශීය සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති සහ පාර්ලිමේන්තු මන්ත්රී සමන්මලී ගුණසිංහ මහත්මිය, සුදුසු ස්ථානයක් සොයාගෙන යෝජනා කළහොත් එය ලබා දීමට තමා සූදානම් බවට පොරොන්දු විය.
“𝗧𝗵𝗿𝗲𝗮𝘁 𝘁𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 𝗦𝗮𝗳𝗲𝘁𝘆 𝗯𝘆 𝗧𝗵𝗼𝘀𝗲 𝗥𝗲𝘀𝗽𝗼𝗻𝘀𝗶𝗯𝗹𝗲 𝗳𝗼𝗿 𝗘𝗻𝘀𝘂𝗿𝗶𝗻𝗴 𝗜𝘁”
– Request for Immediate Action by Municipal Councillor Arqam Muneer at the Dehiwala Divisional Coordinating Committee Meeting
The Divisional Coordinating Committee meeting for the month of July was held yesterday (30.07.2025) at the Divisional Secretariat – Dehiwala. During this meeting, the Leader of the Social Justice Party and Dehiwala – Mt. Lavinia Municipal Councillor Arqam Muneer raised the following concerns:
1. “𝗕𝘆 𝗿𝗮𝗶𝘀𝗶𝗻𝗴 𝘁𝗵𝗶𝘀 𝗶𝘀𝘀𝘂𝗲, 𝗜 𝗺𝗮𝘆 𝗵𝗮𝘃𝗲 𝘁𝗼 𝗳𝗮𝗰𝗲 𝘁𝗵𝗿𝗲𝗮𝘁𝘀. 𝗛𝗼𝘄𝗲𝘃𝗲𝗿, 𝗶𝗳 𝘄𝗲 𝗮𝗿𝗲 𝗻𝗼𝘁 𝘄𝗶𝗹𝗹𝗶𝗻𝗴 𝘁𝗼 𝘀𝗽𝗲𝗮𝗸 𝗼𝘂𝘁, 𝘁𝗵𝗲𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼 𝗽𝘂𝗿𝗽𝗼𝘀𝗲 𝗶𝗻 𝗵𝗼𝗹𝗱𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲𝘀𝗲 𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝗼𝗻𝘀.”
Yesterday, the Secretary of Mt. Lavinia Bar Association Attorney-at-Law Geethma Fernando accused that Dehiwala Police have filed nine false drug – related cases against innocent individuals. One of the accused individuals, overwhelmed by the resulting mental distress, has taken his own life by hanging. His sister has submitted his death certificate to Court and requested that the ongoing case against the deceased be dismissed . Simultaneously, the Government Analyst’s Department has submitted a report to the Court confirming that the deceased had no connection to any drugs. The individual has now been proven innocent, but he is no longer alive to witness it.
A similar situation occurred in Mawanella, where a person named Mohamed Suhail was wrongfully accused of terrorism – related charges and unjustly detained for nine months, also by the Dehiwala Police.
Residents of Dehiwala are not safe under the protection of the police. Likewise, individuals coming into Dehiwala from other areas, such as Suhail, are not safe either. The very institution responsible for the safety of the people has now become a threat to their security.
2. The agenda and relevant documents of the Dehiwala Divisional Coordinating Committee meetings must be shared in advance with Municipal Council members and relevant officials. Without prior access to these materials, we are unable to contribute meaningfully with our opinions or suggestions regarding the public issues raised during the meetings.𝗧𝗵𝗲 𝗗𝗲𝗵𝗶𝘄𝗮𝗹𝗮 – 𝗠𝘁. 𝗟𝗮𝘃𝗶𝗻𝗶𝗮 𝗠𝘂𝗻𝗶𝗰𝗶𝗽𝗮𝗹 𝗖𝗼𝘂𝗻𝗰𝗶𝗹 𝗵𝗮𝗻𝗱𝗹𝗲𝘀 𝘁𝗵𝗶𝘀 𝗮𝘀𝗽𝗲𝗰𝘁 𝘃𝗲𝗿𝘆 𝗲𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲𝗹𝘆. 𝗔𝗹𝗹 𝗿𝗲𝗹𝗮𝘁𝗲𝗱 𝗱𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝘀 𝗮𝗿𝗲 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝘁𝗼 𝘂𝘀 𝗮𝗵𝗲𝗮𝗱 𝗼𝗳 𝘁𝗶𝗺𝗲. 𝗦𝗶𝗺𝗶𝗹𝗮𝗿𝗹𝘆, 𝘁𝗵𝗲 𝗱𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝘀 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗖𝗼𝗼𝗿𝗱𝗶𝗻𝗮𝘁𝗶𝗻𝗴 𝗖𝗼𝗺𝗺𝗶𝘁𝘁𝗲𝗲 𝗺𝗲𝗲𝘁𝗶𝗻𝗴𝘀 𝘀𝗵𝗼𝘂𝗹𝗱 𝗮𝗹𝘀𝗼 𝗯𝗲 𝘀𝗵𝗮𝗿𝗲𝗱 𝗶𝗻 𝗮𝗱𝘃𝗮𝗻𝗰𝗲.
3. At the Divisional Coordinating Committee meeting held on 19.06.2025, I raised a question regarding the shortage of space at Meelad School. Today, Municipal Councillor Hon. Mohamed Indikab brought up the same issue. Fellow council members Hon. Samsudeen Jiffry and Hon. Rizwana Faleel also shared their views on the matter. However, between the previous and the current meetings, no progressive steps have been taken. 𝗧𝗵𝗲 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗮𝗱𝗺𝗶𝗻𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗶𝘀 𝗿𝗲𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗻𝗴 𝗼𝗻𝗹𝘆 𝗮 𝗽𝗹𝗼𝘁 𝗼𝗳 𝗹𝗮𝗻𝗱 𝘁𝗼 𝗰𝗼𝗻𝘀𝘁𝗿𝘂𝗰𝘁 𝗻𝗲𝘄 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗯𝘂𝗶𝗹𝗱𝗶𝗻𝗴𝘀. 𝗜𝗳 𝗮 𝘀𝘂𝗶𝘁𝗮𝗯𝗹𝗲 𝗹𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 𝗰𝗮𝗻 𝗯𝗲 𝗶𝗱𝗲𝗻𝘁𝗶𝗳𝗶𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗳𝗶𝗻𝗮𝗹𝗶𝘇𝗲𝗱 𝗵𝗲𝗿𝗲 𝘁𝗼𝗱𝗮𝘆, 𝘁𝗵𝗲 𝗻𝗲𝘅𝘁 𝗽𝗵𝗮𝘀𝗲 𝗼𝗳 𝗱𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 𝗰𝗮𝗻 𝗯𝗲 𝗶𝗻𝗶𝘁𝗶𝗮𝘁𝗲𝗱.
In response to this matter, the Chairperson of the Divisional Coordinating Committee and Member of Parliament Hon. Samanmalee Gunasinghe assured that, if a suitable location is proposed, she is ready to take the necessary steps to acquire it.
#socialjusticeparty #sjp #featherforceinaction #arqammuneer #DMMC #dehiwalamountlaviniamunicipalcouncil



