News
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதாக சஜித் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குமார வெல்கம அறிவிப்பு
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2 சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புலுவன் ஸ்ரீலங்கா’ நிகழ்வில் கலந்துகொண்ட SJB பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.
செப்டம்பர் 21, 2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.