News

சர்வஜன அதிகாரம் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட இளைஞர் விவகார ஒருங்கிணைப்பாளராக மொஹமட் அர்ஷாட்
நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட இளைஞர் விவகார ஒருங்கிணைப்பாளராக மொஹமட் அர்ஷாட்
நியமனம் பெற்றுள்ளார்.

மற்றும் இவர் சர்வஜன  அதிகாரம் கட்சியின் முஸ்லிம் இளைஞர் விவகார ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே நியமனம் பெற்றுள்ளார்.

மொஹமட் அர்ஷாட் அவர்கள் நிதி முகாமைத்துவத்தில் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர்,சர்வதேச வர்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார் மற்றும் தற்போது நிதி முகாமைத்துவ வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

இவர் TOP NOTCH ,LOW COST LUXURIES பிராண்ட் உரிமையாளராவர்,

அது மட்டுமன்றி கல்வியகங்களின் உரிமையாளரான இவர் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

முயற்சியாளர்களை உருவாக்குவோம் மகிழ்சியான நாட்டினை கட்டியெழுப்பி இலங்கையை அபிவிருத்தியடைய செய்வோம் எனும் தனது கட்சியின் கெள்கையை மையமாகக்கொண்டு சர்வஜன சபைகளினூடாக இளைஞர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்கைத் தரத்தினை, வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே அவரின் பிரதான நோக்கம் இன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இளைஞர்கள் அரசியலில் பிரவேசிப்பது அடுத்த சந்ததியினரின் அரசியல் ரீதியான வளர்ச்சிக்கு ஒரு நேர்மறை சமிக்ஞை யாகவும் உந்து சக்தியாகவும் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button