News
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!
களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சில் பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது.