அமெரிக்க தாக்குதலில் ஈரானில் ஆரம்ப பாடசாலையில் 175 பேர் கொல்லப்பட்டது, ராணுவ இலக்கு என்று நினைத்து தவறாக நடத்தப்பட்ட தாக்குதல் என டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு

ஈரானில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க ராணுவ விசாரணையின் பூர்வாங்க முடிவுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) அறிக்கையின்படி, பிப்ரவரி 28 அன்று ஏவப்பட்ட அமெரிக்க டோமாஹாக் (Tomahawk) ஏவுகணை ஒன்று, தெற்கு ஈரானிய நகரமான மினாப்பில் (Minab) உள்ள ஒரு பாடசாலையை ராணுவ இலக்கு என்று தவறாக அடையாளம் காணப்பட்டு தாக்கியதாக பூர்வாங்க விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும்
பழைய அல்லது தவறான இலக்கு உளவுத் தகவல்களால் இந்தத் தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டிரம்ப், இது தொடர்பான அறிக்கைகள் குறித்து தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விசாரணையின் முடிவுகளை அமெரிக்க அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.



