இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இயக்க இலாபம் 16,133 மில்லியன் ரூபாவாக உயர்ந்தது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலாபம் மற்றும் விமான இயக்கங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், விமான நிலையத்தின் இயக்க இலாபம் 16,133 மில்லியன் ரூபாவாக உயர்ந்து, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான 9,049 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 78 வீத அதிகரிப்பைக் கண்டுள்ளது.
இதே காலகட்டத்தில், மொத்த விமான இயக்கங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 வீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச விமான இயக்கங்கள் 17 வீதம் அதிகரித்துள்ளன, இதில் மார்ச் மாதத்தில் 22 வீதம் என்ற உயர்ந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது. உள்நாட்டு விமான இயக்கங்களும் 10 வீதம் வளர்ச்சியடைந்து, ஜூன் மாதத்தில் 38 வீதம் என்ற உச்ச வளர்ச்சியை எட்டியுள்ளது.
வரவிருக்கும் சுற்றுலாக் காலத்தில் இலாபமும் விமான இயக்கங்களும் மேலும் விரிவடையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

