News

மருதமுனையின் மூத்த உலமாக்களில் ஒருவரான அபூ உபைதா மதனி சவூதி அரேபியாவில் காலமானார்

ஏ.எஸ்.எம்.அர்ஹம்
நிருபர்

மருதமுனையின் மூத்த உலமாக்களில் ஒருவராகவும், மருதமுனை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் தலைவராகவும் மதிப்புமிகு பணி ஆற்றிய அஷ்-ஷெய்க் A. அபூ உபைதா மதனி அவர்கள் இன்று (19) சவூதி அரேபியாவில் உள்ள வைத்தியசாலையில் காலமானார்.

இஸ்லாமிய கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மதிப்பிற்குரிய வழிகாட்டுதலில் மறக்க முடியாத பங்காற்றிய அஷ்-ஷெய்க் அபூ உபைதா மதனி அவர்கள், சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த அறிஞராக விளங்கியவர்.

இந்நிலையில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், துஆ பிரார்த்தனையையும் மேற்கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“அபூ உபைதா மதனி அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் மிகவும் நேர்மையான ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். மேலும் என்னோடு மிகுந்த நெருக்கமான உறவை பேணியவர். அன்னாரின் மறைவு, சமூகத்திற்கும் மதத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை அருள்வானாக”
ஆமீன்…

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button