News

பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவை படுகொலை செய்ய எடுக்கப்பட்டிருந்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டது… ஒருவர் கைது.

“ஹரக் கட்டா ” என்று அழைக்கப்படும் நடுன் சிந்தகவை பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு படுகொலை செய்ய முயற்சித்த  “பெக்கோ சமன்” இன் அடியாள் ஒருவரை மஹரகமவில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண  குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (02) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைகளில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு அரச நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்பதும், பாதாள உலகக் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவின் ஆணைக்கு அமைய இந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.


அந்த நபர் கைது செய்யப்பட்ட சமயத்தில், பொலிஸார் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சேதமடைந்த வீடியோ கமரா ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர், “ஹரக் கட்டா” காவலில் வைக்கப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் பத்திரிகையாளர் போல் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button