News
கத்தாரில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்தார் – இதுபோன்ற சம்பவம் இனிமேல் கத்தாரில் நடக்காது என உறுதியும் அளித்தார்.

இஸ்ரேல், கத்தாரில் உள்ள ஹமாஸ் இலக்குகளை தாக்கியது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே கத்தாருக்கு எச்சரிக்கை விடுக்குமாறு தனது முக்கிய உதவியாளர் ஸ்டீவ் விட்காஃப்-ஐ டிரம்ப் அறிவுறுத்தினார் என்று வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தாக்குதலுக்கு பின்னர், டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கத்தார் அமீர் ஆகியோருடன் பேசினார். கத்தார் தலைவருக்கு, “இனி இது போன்ற நிகழ்வு அவர்களது மண்ணில் நடக்காது” என்று டிரம்ப் உறுதியளித்தார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

