News

ஹரீஸ் எம்.பி தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்தி : ஊடகப்பிரிவு மறுக்கிறது !

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் தனது பணிகளை சமூக அக்கறையுடன் முன்னெடுத்து செல்வார் என பொறுப்புடன் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button