சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடுமென்று பாராளுமன்றில் தெரிவித்துவிட்டு MP பதவியை துறந்தார் தலதா அத்துக்கோரல
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள
பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார்.
ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக்கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டார் தலதா.
சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்றதாகி விடுமென்றும் தலதா தனது உரையில் குறிப்பிட்டதுடன் கோட்டாவின் ஆட்சி எப்படி வீழ்ந்தது என்பதை சஜித் அறிய முயல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
தலதா அத்துகோரள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த காமினி அத்துகோரளவின் சகோதரி ஆவார்.
அவர் 2004 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், 2010, 2015 மற்றும் 2020 பொதுத் தேர்தல்களில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 இல், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 45,105 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.