News

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சென்ற முபீன், பரீட் ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிஸ்புல்லாஹ் அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல் எம். பரீட் ஆகியோரை கட்சியிலிருந்து இடை நிறுத்தவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீனுக்கு எதிராக கட்சி நேரடியாக நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது.



பரீட் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் அவரை அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்போம்.



இந்த தேர்தலில் நமது கட்சி எடுத்த தீர்மானத்தை கட்சி ஆதரிக்கும் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை முழுமையாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button