News
76 வருடங்களாக நாட்டைக் குட்டிச்சுவராக்கிய சக்திகளை தோற்கடிக்க, ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரத்தை துவங்கியது சமூக நீதிக் கட்சி
’76 வருடங்களாக நாட்டைக் குட்டிச்சுவராக்கிய சக்திகளை தோற்கடிப்போம்; மாற்றுச் சக்தியின் நிலைப்பாடுகளை உறுதிசெய்துகொண்டு வாக்களிப்போம்!” எனும் தொனிப்பொருளில் சமூக நீதிக் கட்சியின் மக்களை ஜனாதிபதித் தேர்தல் குறித்து விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் இன்று கொழும்பில் துவங்கியது.
கொழும்பு மருதானை ஸாஹிரா பள்ளி மற்றும் மருதானை சின்னப் பள்ளிக்கு அருகில் ஜும்மா தொழுகைக்கு பின்னர் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் போது, மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
#PresPollSL #socialjusticeparty #sjp