இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயற்பட்டுவரும் மற்றோா் ஆயுதக் குழுவினரான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்துவருகிறது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் அவசர நிலையை அறிவித்தார்.
ஹமாஸ் அரசியல் குழுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.