News
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் M.P மார் உள்ளிட்ட 31 சந்தேகநபர்கள் அடையாளம்

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குற்றப்பத்திரிகைகள் விரைவாகத் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாகவும், மேலும் அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்



