எமது நாட்டை மிகவும் குறுகிய காலத்தில் செல்வம் மிக்க நாடாக மாற்ற முடியும்…. மேலும் நீங்கள் நாட்டுக்கு செலுத்திய வரி எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விபரத்தை ஆண்டின் இறுதியில் உங்களுக்கு அனுப்பி வைப்போம்.
வரி செலுத்துபவர்களுக்குத் தாம் செலுத்திய வரிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கான நியாயமான உரிமை உள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வங்கிகள் மற்றும் நிதித்துறை மன்ற தொழில் வாண்மையாளர்களின் தேசிய மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாடு என்ற வகையில் எங்களால் கடனை மீளச்செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறே எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கு முடியாது போயுள்ளது.
இளைஞர்களுக்கு நாட்டிலே தொழிலைத் தேடிக்கொள்ள முடியாமல் போயுள்ளது. எமது நாட்டை மிகவும் குறுகிய காலத்தில் செல்வம் மிக்க நாடாக மாற்ற முடியும்.
அது மாத்திரமன்றி, இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நீங்கள் செலுத்திய வரி எவ்வாறு செலவிடப்பட்டது என்ற விபரத்தை ஆண்டின் இறுதியில் உங்களுக்கு அனுப்பி வைப்போம்.
தாம் செலுத்திய வரிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொண்டார்களானால் எவரும் வரி செலுத்துவதைத் தவறவிடமாட்டார்கள் என்றார்.