News

தகராறை அடுத்து 22 வயது மனைவியை மின்விசிறியின் வயரால் கழுத்தை நெ*ரித்துக் கொன்று விட்டு வி*ஷம் குடித்த 25 வயது கணவன் #இலங்கை

நவம்பர் 17 ஆம் திகதி(நேற்று) மாலை வாகரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரியன்கட்டு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட 22 வயதுடைய பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தட்டமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், சம்பவத்திற்கு சற்று முன்னர் தனது கணவருடன் குடும்பத் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கணவன் மின்விசிறியின் வயரால் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் 25 வயதுடைய கணவன் விஷம் அருந்தி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button