News
21 ஆம் திகதி பேரணிக்கு நானும் வருவேன் – அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் ; மகிந்த

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொள்ளவுள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக இப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது



