News

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் உரையாடினேன் – இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு நெருக்கமான ஆதரவுடன் இந்தியா இருக்கும் என்பதை உறுதி செய்கிறேன்; மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுடன் உரையாடியதுடன், டித்வா புயல் காரணமாக பரவலாக ஏற்பட்ட பேரழிவுக்காகவும் துயர்மிக்க உயிரிழப்புகளுக்காகவும் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தேன். 

இந்த கடினமான நேரத்தில் மிகவும் நெருக்கமானதும் நம்பகமானதுமான நண்பனாக இந்தியா இலங்கையுடனும், அந்நாட்டு மக்களுடனும் உறுதுணையாக நிற்கின்றது.

தற்போது முன்னெடுக்கப்படும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தேவையான சகல அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் அதேவேளை, இலங்கை தனது புனர்வாழ்வு மற்றும் மீட்சி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நிலையிலும் இந்தியா துணைநிற்கும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button