News

தன்னார்வப் படை அணிதிரட்டல் மற்றும் ஒருங்கிணைப்பு – மத்திய மாகாண ‘ரம்யலங்கா’ அமைப்பின் முயற்சி



*Volanteer Mobilisation and Coordination.*

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு  அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாயுள்ள மக்களின் வீடுகள் மற்றும் வியாபாரத்தளங்களை சுத்தப்படுத்தி மீள்குடியமர்வு மற்றும் மீள்ஆரம்பம் செய்ய வேண்டிய  பாரிய தேவை உள்ளது.


இப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பினும் போதியளவு ஒழுங்கமைக்கப்படாத நிலை களத்தில் காணப்படுவது ஒரு கவலைக்குறிய விடயமாக உள்ளது. எனவே இதனை ஒழுங்குபடுத்தி ஒருங்கமைக்கும் பணியில் மத்திய மாகாண *ரம்யலங்கா* அமைப்பு முன்னின்று செயற்படுகின்றது.

நீங்கள் நாட்டில் எப்பகுதியில் இருந்தாலும் மத்திய மாகாணத்திற்கு வருகைதந்து தன்னார்வ தொண்டுப்பணியல் ஈடுபட விரும்பினால் பின்வரும் தொடர்பிலக்கங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்களது இப்பாரிய நற்பணி சிறப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையிலும் நடைபெற *ரம்யலங்கா* அமைப்பு உங்களுக்கு வழிகாட்டும். தேவையுள்ள இடங்களுக்கு தேவையான மனிதவளத்தை பகிர்வதுடன் முடியுமான உபகரண ஏற்பாடுகளையும் செய்து வழங்கும்.

Faizer Ali  (Lawyer) 0773293943
Farhan Sir 0756003696
Jazil Sir 0770035760
Ilham Br 0771505300

*பாதிக்கப்பட்ட உறவுகளின் துயரத்தில் பங்கெடுத்து அவர்களை மீட்டெடுப்போம்.*

தகவல்: அஹமட்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button