News

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 650 தொலைபேசிகளுடன் நபர் ஒருவர் புத்தளம்- கரம்ப பிரதேச வீதித்தடையில் வைத்து கைது

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, அலைபேசிகளை மோசடியான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் கரம்ப பிரதேசத்தில் உள்ள வீதித்தடையில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் கெப் வாகனத்தில் இருந்து அலைபேசிகளை மாற்றிய போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்  52 வயதுடைய கெக்கிராவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மற்றும் அலைபேசிகள் என்பன கெப் வண்டியுடன் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button