News
அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு 25 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய நிதியம் (Bandaranaike Memorial International Foundation), சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்துக்காக அரசு அமைத்திருக்கும் நிதியத்திற்கு ரூ. 250 மில்லியன் (25 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளது.



