News

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் பூமி வெடித்தது ; முன்னாள் அமைச்சர் தலாதா அத்துகோரள தெரிவிப்பு

📰 முன்னாள் அமைச்சர் தலாதா அத்துகோரளவின் கருத்துக்கள்.


முன்னாள் அமைச்சர் தலாதா அத்துகோரள இன்று கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் பூமி வெடித்ததாகத் தான் நம்புவதாகக் கூறினார்.
அரசாங்கம் இஷ்டம் போல் பொய்களைச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்தியது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


“இது எனது தனிப்பட்ட நம்பிக்கை. ‘பொய் சொல்லாதே, பூமி வெடித்துவிடும்!’ என்று நாம் சாதாரணமாகச் சொல்வதுண்டு. அதுதான் இப்போது நடந்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.

அத்துடன், “பொய்கள் குறுகிய காலம் வாழ்பவை” என்றும் அவர் மேலும் கூறினார்.
நல்லாட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகவும் அத்துகோரளா தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button