News
அலுவலக வாகனம் பழுதடைந்து விட்டதால், நகர சபையின் உழவு இயந்திரத்தில் சென்று கடமைகளை நிறைவேற்றி வரும் கிண்ணியா நகர சபை தவிசாளர்

கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்கள் தற்போது தனது அலுவலக கடமைகளை நகர சபையின் உழவு இயந்திரத்தில் சென்று நிறைவேற்றி வருகின்றார்.
தவிசாளருக்கான அலுவலக வாகனம் பழுதடைந்து கைவிடப்பட்ட நிலையில் இன்று (10) வாகனம் இன்மையால் நகர சபையின் வழமையான பணிகள் முடங்கி விடக் கூடாது என்பதற்காக உழவு இயந்திரத்தில் சென்று மக்களது தேவைகளை நிறைவேற்றுவதோடு அலுவலக கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றார்.
Hasfar A Haleem BSW (Hons)
Journalist
No.37/15, Periyatrumunai
Kinniya – 07, Sri Lanka.



