News
VIDEO > தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.
மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரசார அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த பிரசார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த கட்டிடமும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைத்த நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர் pls Wait for loading video