News
கந்தளாயில் நூறு வருட வரலாற்றைக் கொண்ட பழமையான மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்ததில் பொலிஸ் ஜீப்கள், முச்சக்கரவண்டி என்பன பலத்த சேதம்
கந்தளாய் யூசுப்
கந்தளாயில் நூறு வருட வரலாற்றைக் கொண்ட பழமையான மரம் ஒன்று வேரோடு சரிந்தது.
கந்தளாய் பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் இருந்த, நூறு வருட காலத்து வரலாற்றைக் கொண்ட பழமை வாய்ந்த இத்தி மரம் ஒன்று இன்று (29) வேரோடு சரிந்து விழுந்துள்ளது.
குறித்த மரம் இன்னும் ஒரு கருங்காலி மரத்தில் மீது விழுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தத்தில், முச்சக்கர வண்டி ஒன்று முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் ஜீப் வண்டி இரண்டும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரம் முறிந்து விழுந்த போது, இந்தப் பகுதியில் எவருடைய நடமாட்டமும் இல்லாததிருந்ததனால் தெய்வாதீனமாக மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்