News
150000 மணல் மூட்டைகளை பயன்படுத்தி 65 குளங்களை புனரமைத்தோம் ..

வெள்ளப் பேரழிவால் இடிந்து விழுந்த குளங்களை மீண்டும் கட்டியெழுப்ப 150,000 க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் வசந்தசமரசிங்க கூறுகிறார்.
“மணல் மூட்டை மூலம் குளம் கட்டுவது நல்ல யோசனையல்ல என்று சிலர் கூறுகிறார்கள். 18,000 மணல் மூட்டைகளை கட்டி அனுராதபுரத்தில் ஒரு குளத்தை பாதுகாத்தோம் .”
“65 குளங்களை 150,000 க்கும் அதிகமான மணல் மூட்டைகளை பயன்படுத்தி புணரமைத்துள்ளோம் என அவர் கூறினார்.



