News
அம்பலாங்கொடை நகரில் உள்ள வணிக நிறுவன முகாமையாளர் இன்று காலை சுட்டுக்கொலை

அம்பலாங்கொடை நகரில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் இன்று (22) காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அந்த முகாமையாளர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு போட்டி பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அம்பலாங்கொடை பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.



