புதிய சர்ச்சை ! பாடப்புத்தகங்களின் வடிவமைப்பில் LGBTQ+ சமூகத்தின் வானவில் கொடி ?

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பல பள்ளி பாடப்புத்தகங்களின் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் வண்ண சேர்க்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒரு விவாதமும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்தப் பாடப்புத்தகங்களின் அட்டைப்படங்களுக்குப் பயன்படுத்தப்படும் வண்ண வடிவங்கள், உலகெங்கிலும் உள்ள LGBTQ+ சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வானவில் கொடியை ஒத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடப்புத்தகங்களின் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் வண்ணங்களின் தேர்வு வெறுமனே தற்செயல் நிகழ்வு அல்ல என்று சமூக ஊடக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
இதுபோன்ற சின்னங்களை மறைமுகமாக இளம் குழந்தைகளின் மனதில் புகுத்துவது கலாச்சார பிரச்சினைகளை உருவாக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கல்வி சீர்திருத்த செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாடப்புத்தக ஒப்புதல் செயல்முறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.



