iKING Menswear – உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் பிரம்மாண்ட அறிமுகம்

iKING Menswear தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ikingclothing.com ஐ பிரம்மாண்டமான விழாவுடன் வெற்றிகரமாக அறிமுகம் செய்தது.
இந்த நிகழ்வு, கொட்டாவை – பிட்டகோட்டையில் அமைந்துள்ள iKING பிரதான காட்சியரையில் (120, Pagoda Road, Pitta Kotta) சிறப்பாக நடைபெற்றது.
இந்த முக்கிய நிகழ்வுக்கு iKING நிறுவனத்தின் ஸ்தாபகர் Ihsan wahid தலைமை தாங்கியதுடன், பல முக்கிய பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
Newswire நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான Azam Ameen அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் முன்னாள் Media Forum தலைவருமான N.M. Ameen மற்றும் PickMe நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் Fathhi Mohammed ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக விழாவை சிறப்பித்தனர்.
தொழில் முயற்சியாளர்கள், நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் iKING நிறுவனத்தின் தூரநோக்கை கொண்டாடும் தருணமாக அமைந்தது.
iKING – பிராண்டின் உருவாக்கம்
2007 செப்டம்பரில் Ihsan wahid (MBA, HID) அவர்களால் உவாக்கப்பட்ட iKING, இலங்கை ஆண்கள் தங்கள் ஆடை அலங்காரத்தை வெளிப்படுத்தும் முறைமையை நவ நாகரீக அழகியலுடன் மறுவடிவமைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
Ihsan wahid வெற்றிகரமான ஒரு தொழிலதிபர், பெஷன் வடிவமைப்பாளர், பிசினஸ் கோச், திட்ட ஆலோசகர், சிறந்த பேச்சாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளராக அறியப்படுகிறார்.
“Be The Best Version Of U!!!” என்ற வாசகத்துடன், iKING ஆடைகள் தன்னை சிறப்பாக உணரும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.
ஒவ்வொரு ஆடையும் முதல் வடிவமைப்பிலிருந்து இறுதி தையல் வரை, பெருமை, தன்னம்பிக்கை, ஸ்டைல் மற்றும் ஒருவர் தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
iKING-ஐ தனித்துவமாக்கும் அம்சங்கள்
இலங்கை காலநிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள துணிகள்
IW Creative Design Department மூலம் தலைமுறை தலைமுறையாக தொடரும் வடிவமைப்பு அணுகுமுறை
iKING Lanka Apparel (Pvt) Ltd,
எண் 17, வேஹிகல வீதி, உக்குவெல, மாத்தளை
இங்கு 100 க்கும் மேற்பட்ட திறமையான தொழிலாளர்களால் இயக்கப்படும் நவீன உற்பத்தி நிலையம்
iKING Holdings (Pvt) Ltd மூலம் தரத்தை மையமாகக் கொண்ட சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்
இந்த அர்ப்பணிப்பு, ஒவ்வொரு ஆடையும் நீடித்த தரத்துடனும், காலத்தைக் கடந்த ஸ்டைலுடனும் இருக்கச் செய்கிறது.
நோக்கம் & மதிப்புகள்
“ஆண்கள் ஆடைகளில் சிறந்த தேர்வாக இருப்பது” என்பதே iKING-இன் நோக்காகும்.
இலங்கையின் தீவுக் கலாச்சார பாரம்பரியத்தையும், உலகளாவிய பெஷன் ஸ்டைலையும் ஒருங்கிணைப்பதே அதன் அடிப்படை தத்துவமாகும்.
ஒவ்வொரு தெரிவும் இலங்கையின் பண்பாட்டு வளத்திற்கு மரியாதை செலுத்தி, நவீன வடிவமைப்பு, நுட்பமான விவரங்கள் மற்றும் உயர்ந்த தோற்றத்துடன் உருவாக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பேரார்வ மூட்டும், தனித்துவமான ஆண்கள் ஆடைகள் உருவாகின்றன.
18 ஆண்டுகளாக சவால்கள், தோல்விகள் மற்றும் தடைகளை தாண்டி வளர்ந்த iKING, இன்று நம்பகமான பெஷன் பிராண்டாக உயர்ந்துள்ளது.
iKING தொடர்ந்து தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் பெருமையை ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ஊக்குவித்து வருகிறது.
















