News

நான் கைது செய்யப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர் – நான் விடுதலையானதை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ; டக்ளஸ் தேவானந்தா

தன்னை திடீரெனக் கைதுசெய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடியுமென முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



அவர் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கணொளி ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த காணொலியில் குறிப்பிட்டுள்ளதாவது,



இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு பல காரணங்களுக்காக எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.



அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்க்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவானுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன். என குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button