News

மஹிந்தவை ஆட்சியில் அமர்த்த வேலை செய்தமை அனுரவுக்கு ஹலாலா ?

“ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” கேஸில் மஹிந்த ஊழல் செய்தமை தெரிந்தும் 2005 இல் அவரோடு கூட்டு அமைக்கும் போது அனுரவுக்கு அது ஹராம் என தெரியவில்லையா என பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று அனுர குமார முஸ்லிம்களிடம் ஹராம் ஹலால் பற்றி பேசுகிறார்.திருடர்களுக்கு வாக்களிப்பது ஹராம் என்கிறார். திருடர்களை பிடிக்க வந்துள்ள அவர்களுக்கு வாக்களிப்பது ஹலால் என்கிறார். ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை” கேஸில் மஹிந்த ஊழல் செய்தமை தெரிந்தும் 2005 இல் அவரோடு கூட்டு அமைக்கும் போது அனுரவுக்கு அது ஹராம் என தெரியவில்லையா ? என நான் கேட்கிறேன்.

1995 இல் சந்திரிக்காவோடு டீல் வைத்த அவர்கள் 2005 இல் மகிந்த ஊழல்வாதி என தெரிந்த அவரை வெற்றிபெற செய்ய பிரசாரம் செய்தார் மஹிந்தவை துட்டு கெமுனு அரசன் என்று கூறியவர் இந்த அனுர திஸாநாயக என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.

அவரிடம் உள்ள ஊழல் பைல்கள் அனைத்துமே ராஜபக்‌ஷ குடும்பத்தினரதும் அவரது கட்சிக்காரர்களுடையதே. அவர்களை ஆட்சிக்கு கொண்டு நான் கைகலில் மைபூசவில்லை அனுரவே திருடர்களை ஆட்சிக்குகொண்டுவர மை பூசிக்கொண்டவர் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button