News

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று பணிநிறுத்தப் போராட்டம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.



நிர்வாக மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவிக்கு வேறொரு பணிப்பாளரை நியமிக்கக்கோரி இப் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள 02 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த பணிநிறுத்தம் செயல்படுத்தப்படும்.



மேலும் அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணி நிறுத்தத்தில் இணைந்துள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button