News
டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து, அரசாங்கம் எவ்வாறு நாட்டை அழித்து வருகிறது என்பதை விளக்க போவதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரை விஹாராதிபதி தேரர் தெரிவிப்பு

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வலவாஹங்குணவெவே தம்மரதன தேரர், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை விமர்சித்ததுடன், அரசாங்கம் எவ்வாறு நாட்டை அழித்து வருகிறது என்பதை விளக்குவதற்குத் தான் டொனால்ட் ட்ரம்பைச் சந்திக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்குத் தெரிந்த மாணவர் ஒருவர் தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி ட்ரம்ப் குடும்பத்தினரை அணுகியதையடுத்து, இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க வரி குறைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


