வரவு செலவு திட்டத்திற்கு IMF இடமிருந்து 57000 கோடி ரூபா
ஜனாதிபதியும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கை அமைச்சருமான ரணில் விக்கிரம சிங்கவால் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்டத்திலான விரிவான கடன் ஒப்பந்தத்துக்கமைய எதிர்வரும் 2025ஆம், 2026ஆம், 2027ஆம் ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது 57,000 கோடி ரூபாவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் 4 மாதங்களுக்கு பின்னர் 2025ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் வரவு, செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கப்படும் போது 700 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 21,000 கோடி ரூபாவை (Budgetary Support) 2025 ஆம் ஆண்டில் 700 மில்லியன் டொலர் , 2026ஆம் ஆண்டிலும் 2027ஆம் ஆண்டிலும் தலா 600 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் அதாவது தலா 18,000 கோடி ரூபா வீதம் வழங்கவும் இந்த உடன்படிக் கையின் ஊடாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களினுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களை பின்பற்றாவிட்டால், இலங்கை அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர் கொள்ளநேரிடுமென்று அரசாங்க நிதித்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.