யாழில் 2010 ஆம் ஆண்டு 60 வயது நபரை கோடரியால் தா* க்கி கொன்ற குற்றத்தில் கைதான இருவருக்கு இன்று மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி மந்தைவெளி, கொடிகாமம் பகுதியில் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்ட காலமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டதுடன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்


