சஜித்தால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது… அத்துடன் சஜித்துக்கு வாக்களிப்பது அநுரவுக்கு வாக்களிப்பதற்கு போன்றதாகும் என ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
முன்னர் பொருளாதார நெருக்கடிக்கு பயந்து ஓடிய சஜித்துக்கும் ம் அநுரவுக்கும் தற்போது தனது தலைமையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்த ஸ்திரத்தன்மை தனது ஆட்சியின் விளைவே என்று அவர் வலியுறுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, சஜித்தால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும், சஜித்துக்கு வாக்களிப்பது அநுரவுக்கு அளிக்கப்பட்ட வாக்காகும் என்றும் தெரிவித்தார் .
கெக்கிராவ பொது விளையாட்டரங்கில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற “புலுவன் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடைபெற்றது.
தனது நிர்வாகம் சவால்களை எதிர்கொள்ள வேண்டுமாயின், கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று புதிய அரசாங்கத்தை உறுதியான அடித்தளத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த எதிர்கால அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கான ஆணையை ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரினார். சஜித் மற்றும் அநுரவின் கடுமையான மாற்றங்களுக்கான அழைப்பை விமர்சித்த அவர், இது ஒரு வீட்டை எரிப்பதற்கு சமம் என்று அவர் விமர்சித்தார், மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றி முழு நாட்டிற்கும் ஒரு வெற்றியாக இருக்கும் என்று தெரிவித்தார் .