கல்விச் சீர்திருத்த சர்ச்சை: பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவின் கருத்துக்களில் தொழில்நுட்பத் தவறு !

கல்வித் துறையை ஆபாசமயமாக்கும் செயற்பாடு 2015ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானதாகக் கூறி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கடும் விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அவர் ஆதாரங்களாக முன்வைத்த விடயங்கள் தொழில்நுட்ப ரீதியாக சரியானவை அல்ல எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
• 11ஆம் ஆண்டு பாடப்புத்தகம்: 2016ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 11ஆம் தர தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடப்புத்தகத்தின் 77வது பக்கத்தில், ஆபாசத் தளங்களுக்கு வழிவகுக்கும் ‘Buddy’ எனும் இணைப்பு (Link) உள்ளடக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
• விமர்சனம்: உலப்பனே சுமங்கல தேரர் போன்றவர்கள் இதனைப் பார்க்காமல், 6ஆம் தரப் பாடப்புத்தகம் பற்றி மாத்திரம் பேசுவது வேடிக்கையானது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொழில்நுட்ப விளக்கம் மற்றும் உண்மைத் தன்மை
உடனடி செய்திப் பரிமாற்றக் கருவிகளை (Instant Messaging Tools) அறிமுகப்படுத்தும் ஒரு பகுதியாகவே இந்த இணைப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாடல் தொழில்நுட்பத்தைக் கற்பிக்கும்போது பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண மென்பொருள் கருவியாகும்.
எனினும், சம்பந்தப்பட்ட பாடப்புத்தகத்தைப் பரிசோதித்தபோது தெரியவந்துள்ள உண்மைகள் வருமாறு:
1. e-buddy மென்பொருள்: பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பிரதி அமைச்சர் கூறுவது போன்ற ஆபாச இணையத்தளம் அல்ல. அது அக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த ‘e-buddy’ எனும் உடனடி செய்திப் பரிமாற்ற மென்பொருள் (Messenger App) ஆகும்.
2. தவறான புரிதல்: தற்போதைய சர்ச்சைக்குரிய ‘படியா’ (Buddy) எனும் விடயத்திற்கும், 11ஆம் ஆண்டு புத்தகத்தில் உள்ள ‘e-buddy’ எனும் தொழில்நுட்ப மென்பொருளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.



