News
தான் ஒரு வைத்தியர் என மக்களை நம்ப வைத்து வைத்தியராகவே நடித்து வந்தவர் கைது

தான் வைத்தியர் என மக்களை நம்ப வைத்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக தான் வைத்தியர் என நடித்து வந்த நிலையிலேயே இவர் (22) நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



