News
மனைவியை தாக்கி கொன்றுவிட்டு, தலையில் தேங்காய் விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது #இலங்கை
மனைவியை குண்டாந்தடியால் தாக்கி கொன்ற கணவனுக்கு தங்காலை மேல் நீதிமன்றம் வியாழக்கிழமை (11) மரண தண்டனை விதித்தது.
2006 ஆம் ஆண்டு பெலியத்த வீட்டில் வைத்து மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தங்காலை மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பெலியத்த பிரதீப் குமார (41) என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட, தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க, வியாழக்கிழமை (11) மரண தண்டனை விதித்தார்.
தனது மனைவியின் தலையில் தேங்காய் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கணவன், வாக்குமூலம் அளித்திருந்தார்.