எம்பிலிப்பிட்டிய நகரில் இயங்கிய போலி தேர்தல் வாக்களிப்பு நிலையம் தொடர்பில் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு
அண்மையில் எம்பிலிப்பிட்டிய நகரின் முக்கிய இடத்தில் நடாத்தப்பட்ட போலி தேர்தல் வாக்களிப்பு நிலையம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி வேட்பாளர் ஜனக பிரியந்த குமார எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட முடிவுகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாக்குச் சீட்டுகளை விநியோகித்து போலி வாக்களிப்பு மையம் தேர்தலை நடத்தியதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக பிரியந்த குமார புகார் அளித்தார்.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர மற்றும் சிறிதுங்க ஜயசூரிய ஆகிய 6 வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச் சீ
ட்டில் உள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய நகருக்கு வருகை தரும் நபர்கள், தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாக்குப்பெட்டியுடன் கூடிய வாக்குச் சாவடியில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டத்துடன், வாக்களிப்பு முடிவுகள் பேஸ்புக்கில் காணொளி மூலம் அறிவிக்கப்பட்டன.