News

தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு கூறி வடக்கில் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.



தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன.



இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.



இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



பு.கஜிந்தன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button