டித்வா’ (Ditva) சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த 1,580 வீடுகள் மற்றும் முழுமையாக சேதமடைந்த 36 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

டித்வா’ (Ditva) சூறாவளியினால் பகுதியளவில் சேதமடைந்த 1,580 வீடுகள் மற்றும் முழுமையாக சேதமடைந்த 36 வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
“எமது கொள்கைகளின்படி, மக்கள் வழங்கிய இலக்குகளுக்கு அமைய அரசாங்கத்தை வழிநடத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அந்த ஒழுங்குமுறையை உருவாக்க நாம் ஆரம்பித்துள்ளோம். அதன் ஒரு அங்கமே இன்று நடைபெறுகிறது. இந்தச் சட்டமூலங்கள் நாட்டின் அபிவிருத்திக்காகவே நிறைவேற்றப்படுகின்றன. நாட்டுக்கு தொழில் வல்லுநர்கள் அவசியமாகின்றனர்.
பல தொழில் வல்லுநர்கள் சட்ட ரீதியான கட்டமைப்பிற்குள் தங்களது கடமைகளை ஆற்றுவதற்குத் தேவையான வசதிகளை நாம் செய்துகொடுத்துள்ளோம். எதார்த்த ஆதன (Real Estate) துறை சார்ந்த தொழில் வல்லுநர்களுக்கென ஒரு நிறுவனம் இதுவரையில் இருக்கவில்லை. அது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவின. அந்தச் சட்டமூலம் இன்று நிறைவேற்றப்படுகிறது. இன்று முதல் அவர்களுக்கென ஒரு நிறுவனம் அமையும்.
எதார்த்த ஆதன தொழில் வல்லுநர்களுக்கான நிறுவனத்தை அமைப்பது தொடர்பாக பல்வேறு யோசனைகள் உள்ளன. அதேபோல் முறைப்பாடுகளும் உள்ளன. அந்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று இது நிறைவேற்றப்படும். இத்துறை சார்ந்த ஏனைய தொழில் வல்லுநர்களுக்கு இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது.”



