ரிசாத் பதியூதீனை கை நீட்டிக் குற்றம் சாட்ட முனீர் முலப்பருக்கு எந்தத் தகுதியும் இல்லை – உங்களது வீராப்பு பேச்சுக்கள் இந்த பாராளுமன்றம் இருக்கும் வரையில் மட்டுமே ; மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் கடும் விசனம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை விமர்சிப்பதற்கு முன் வடமாகாண முஸ்லிம்கள் 1990 களில் ஆயுத முனையில் வெளியேற்ற பட்டு நிர்க்கதியாக புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாக குடியேறி மக்களுக்கு என்ன செய்திருக்கிறார், 2009 ம் ஆண்டு மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு அவர் என்ன செய்து இருக்கிறார் என்ற வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொண்டு அவரை விமர்சிக்க வாருங்கள். பிரதி அமைச்சர் முனீர் மூலப்பர்.
“முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை கை நீட்டிக் குற்றம் சாட்ட முனீர் முலப்பருக்கு எந்தத் தகுதியும் இல்லை” என கூறிகொள்கிறேன். “உங்களது வீராப்பு பேச்சுக்கள் இந்த பாராளுமன்றம் இருக்கும் வரையில் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.
இதுவரைகாலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளில் கைவைத்தும், அரசியல் ரீதியில் செயலற்ற நிலையில் இருக்கும் பிரதி அமைச்சர் முனீர், ரிசாட் பதியூதீன் குறித்து பேசுவதற்கு முன் அவரது வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.
யுத்தத்தால் அழிந்த மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் நிகழ்த்திய மாற்றம்
வடக்கில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்,
யுத்தத்தால் முழுமையாக அழிந்து,
மிதிவெடிகள் காரணமாக நடந்து செல்லக் கூட முடியாத நிலை இருந்த மூன்று மாவட்டங்களை,
மக்கள் மீண்டும் வாழக்கூடிய நிலைக்கு கொண்டு வந்தது ரிசாட் பதியூதீனின் முக்கிய சாதனை என சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
அந்தப் பகுதிகளில்:
மிதிவெடிகள் அகற்றப்பட்டு
மக்கள் குடியமர்த்தப்பட்டு
அடிப்படை வாழ்வாதார வசதிகள் உருவாக்கப்பட்டது. உங்களது அரசு போன்று ‘டச்சப் பண்ணி பழைய பெயின்டின் மீது புது பெயின்ட்’ பூசி அல்ல – முழுமையான அபிவிருத்தி அவர் செய்துள்ளார்.
மற்ற மாவட்டங்களில் சில அரசியல் வாதிகள் பழைய வீதிகளுக்கு சிறு திருத்தம்,ஏற்கனவே உள்ள கட்டிடங்களுக்கு மேல் தோற்ற மாற்றம்,சிறிய திட்டங்களை “அபிவிருத்தி” என விளம்பரம் செய்வதாக விமர்சிக்கப்படும் நிலையில், ரிசாட் பதியூதீன் என்கின்ற ஆளுமை
புதிய பாதைகள்
பாடசாலைகள், மற்றும் கூடுதல் கட்டிடங்கள்
வேலைவாய்ப்பு திட்டங்கள்
தகுதியான ஆசிரியர் நியமனங்கள்
மின்சார வசதிகள்
வைத்தியசாலை, கிராமிய வைத்தியசாலை சேவைகள்.
மீன்பிடி துறைமுகங்கள்
கால்நடை மேய்ச்சல் நிலங்கள். பல ஆயிரம்
வீட்டு வசதிகள்
குடிநீர் திட்டங்கள்
என அடிப்படையிலிருந்து முழுமையாக புதிய அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்தியவர் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.
அரச நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிலைக்கு மாற்றிய நிர்வாக திறன் அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், தன் கீழ் இருந்த அனைத்து அரச நிறுவனங்களையும்
இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றிய நிர்வாக திறன் கொண்டவர் ரிசாட் பதியூதீன் என்ற தனி மனிதர்,
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் புத்தளம் மன்னார் பாதையினை திறந்து மக்கள் போக்குவரத்துக்காக வசதி செய்து கொடுத்திருந்தார்.
இதற்கு எதிராக சில மத தலைவர்களும், சூழலியலாளர்களும் நீதிமன்றம் சென்றனர். அந்த நீதிமன்றத்தின் சில கட்டளைகளுக்கு அமைவாக இந்த பாதை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
அரசியல் ரீதியாக வேட்கை கொண்டவர்களின் செயற்பாடு காரணமாக இந்த பாதையினை அவர்கள் மூடினார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அப்போது ரிசார்ட் பதியுதீன் அமைச்சராகவோ அரசாங்கத்திலோ அங்கத்துவம் வகிக்கவில்லை.
இந்த வரலாறுகள் தெரியாதவர்கள் அதிகார தொணியில் பாராளுமன்றத்தில் பிழையான தரவுகளையும் ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையிலும் பேசுவது நாவுக்கு நரம்பில்லை என்கின்ற பதத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.
“ஏதோ சிலருக்கு சில வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கலாம். அதற்காக அவர்கள் ஆயிரம் சொல்லலாம். ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தலைவரின் முழு அரசியல் பயணத்தையும் மறுக்க முடியாது”,
இன்று வடக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் ரிசாட் பதியுதீன் என்கின்ற நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது ஆனால் இவை உங்களது காதுகளுக்கு ஒலிக்காமல் போனது ஏனென்று புரியவில்லை முனீர் முளப்பர் உள்ளிட்ட ஆளும் அரசின் முஸ்லீம் உறுப்பினர்களுக்கு. இதிலிருந்து தெரிகிறது உங்களது குறுகிய அரசியல் சிந்தனை.
சில அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் வெறுமனே நிறங்களை பூசி இதுதான் அபிவிருத்தி என்று மக்களை ஏமாற்றுகின்றனர். ரிஷாட் பதியுதீன் என்கின்ற ஆளுமை தேவைகளை அறிந்து புதிய உருவாக்கத்தை தோற்றுவித்துக் கொடுத்தவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘குர்ஆன் விடுவிக்க கூட தைரியம் இல்லாதவர்கள் விமர்சிப்பது ஏன்?’
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட புனித குர்ஆன் தொடர்பான விவகாரத்தில் கூட நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள்,
முஸ்லிம் சமூகத்திற்காக நேரடியாக களத்தில் செயல்பட்ட தலைவரை விமர்சிப்பது வேடிக்கையானது.
இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களும் சிங்களவர்களும் ரிஷாட் பதியுதீனின் ஆட்சிக்காலத்தில் அதிகமாக நன்மைகளை அடைந்திருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றது.
இது போன்று நீங்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உங்களது அணியினரும் செய்து காட்டி இந்த சமூகம் தொடர்பில் பேசுவதற்கு முன் வருகின்ற பொழுது அப்போது உங்களுடைய நிலையினை நாம் நேர்மையாகவே பார்ப்போம்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லாத உங்களைப் போன்றவர்கள் ரிஷாட் பதியுதீன் என்கின்ற அந்த அரசியல் தலைமையை விமர்சிப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதை இந்த அறிக்கை மூலம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
எப்போதும் ஆட்சிக் கதிரைகள் உங்களுக்கு சொந்தமானது என்று எண்ணி உங்களுடைய இருமாப்பான கருத்துக்களை விதைக்க முற்படாதீர்கள்,
“அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியானதொரு பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என்ற செய்தியை முன்கூட்டியே பதிவிட விரும்புகின்றேன்.
ரிசாட் பதியூதீன் மீதான விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியான பதில் மக்கள் மூலம் தொடர்ந்தும் வழங்கப்படும் என்பதையும் நினைவு கூறுகின்றேன்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்,மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்
றியாஸ் இஸ்ஸதீன்.



