நாட்காலியில் ஏறி, கழுத்தில் கயிறொன்றை சுற்றிக்கொண்டு, இன்ஸ்டக்ராம் ரீல்ஸ் எடுக்க முயன்ற ‘மோகினி’ பரிதாபமாக உயிரிழப்பு

இன்ஸ்டகிராம் ரீல் எடுப்பதற்காக தயாரிக்கொண்டிருந்த 27 வயதான மோகினி என்ற பெண் அடுத்த சில நொடிகளில் உயிரிழந்தார் என உத்தரப்பிரதேச மாநில பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்றான சனிக்கிழமை (07) தமது கைப்பேசியில் மோகினி படம் எடுத்துக் கொண்டிருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும், அவர் ரீல் எடுத்துக்கொண்டிருந்தபோது அருகில் யாரும் இல்லை என்று குடும்ப உறுப்பினர்கள், கூறியுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் நான்கு வயது மகள் வீட்டிற்குள் நுழைந்தபோதுதான் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது தாயைக் கண்ட அச்சிறுமி அலறியுள்ளார்.
சமூக ஊடகத்துக்கு அடிமையாகி அதிலேயே ஊறித் திளைத்ததன் காரணமாக உயிரையே பறிகொடுக்கும் நிலை உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
நாட்காலியில் ஏறி, கழுத்தில் கயிறொன்றை சுற்றிக்கொண்டு, ரீல் எடுக்க முயன்ற போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. நாட்காலி நழுவியதா? அல்லது மோகி நிலைதடுமாறி விட்டாரா? என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன



