News

“எம்மால் முடியாது என்று இப்போது கூறாதீர்கள்… 10 வருடங்களின் பின்னர் கூறுங்கள்!” – சதுரங்க அபேசிங்க

தொழில் அமைச்சில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை மீண்டும் ஆராய வேண்டிய தேவை உள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அடிமட்டம் வரை சென்று அத்தகைய விடயங்களை ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஊடகங்கள் அமைச்சர்களிடம் மாத்திரமன்றி செயலாளர்களிடமும் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் வேலை செய்ய முடியாது என இப்போதே மதிப்பிடுவது தவறு எனவும், அதற்காக 5-10 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் சதுரங்க அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சிரச தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button