News

தலங்கம – அக்குரேகொட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியாகின..

தலங்கம, அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்பாக இன்று (13) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்ற வெடி வைப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


மோட்டார் வாகனம் ஒன்றில் இருந்த ஒரு ஆணையும் பெண்ணையும் இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


மற்றொரு மோட்டார் வாகனத்தில் வந்த இருவர் டி-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த துப்பாக்கிச் சூட்டில் புத்திக மல்லவாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சட்டத்தரணி, “கரந்தெனிய சுத்தா” எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளுக்காக முன்னிலையான சட்டத்தரணி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button