குற்றவாளியான அமெரிக்காவை எமது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான போரில் நாம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று விட்டோம் என ஈரான் அறிக்கை வெளியிட்டு அறிவித்தது

அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளதாக ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
போரின் மூலம் ஈரான் அடையவிருந்த அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
குற்றவாளியான அமெரிக்காவை தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் ஈரான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைந்துள்ளது.
மேலும் ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாடு, உரிமை, அனைத்து தடைகளையும் நீக்குதல் ஆகியவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிராந்தியத்திலிருந்த தங்கள் படைகளை திரும்பப் பெறவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக அமெரிக்கா போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், நாங்கள் மீண்டும் மீண்டும் காலக்கெடுவை நிராகரித்தோம்.
போரின் ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன எனும் நற்செய்தியை ஈரானுக்கு நாங்கள் அளிக்கிறோம்.
இன்னும் போர் முடியவில்லை. வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



